திமுகவின் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கருணாஸை மறைமுகமாக விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
"லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு" என்ற தலைப்பில் அந்த கட்டுரை வெளியாகியுள்ளது. இரட்டை இலை சின்னத்தாலும், அதிமுக தொண்டர்களின் ஆதரவாலும் வெற்றிபெற்ற மாற்றுக்கட்சியைச் சேர்ந்த சிலர், நன்றி மறந்து திமுக நடத்திய மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் முகத்துக்காக ஓட்டுப்போட்ட மக்கள், அணி மாறியவர்களை இனி தொகுதிக்குள் தலைகாட்ட விடமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மன்னித்து விடலாம், சட்டப்படி தண்டித்து விடலாம், ஆனால் வாக்களித்த மக்கள் நன்றி மறந்தவர்களுக்கு உரிய பாடத்தை உணர்த்துவார்கள் என நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.