சென்னையில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் உடுமலை ராதகிருஷ்ணன் இல்லத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றுப்பதாக தகவல்வெளியாகியுள்ளது.
அதிமுகவின் 2 அணிகளும் நாளை இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியதுவம் பெறுகிறது. அழைப்பு விடுத்தால் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஓபிஎஸ் இன்று கூறியதர்கு மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை இன்று 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.