தமிழ்நாடு

நீதிபதிகள் முன் அதிமுக-திமுக வழக்கறிஞர்கள் மோதல்

நீதிபதிகள் முன் அதிமுக-திமுக வழக்கறிஞர்கள் மோதல்

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நீதிபதிகள் முன்னிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் மோதிக் கொண்டனர்.

கீரனூரில் புதிய நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் நீதிபதிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு நடந்து வருவதாகக் கூறினார்.‌ அப்போது, திமுக வழக்கறிஞர்கள், குற்றவாளியின் கீழ் நடக்கும் அரசு தேவையில்லை என்று முழக்கமிட்டனர். இதனால், அதிமுக வழக்கறிஞர்கள் மற்றும் விழாவுக்கு வந்திருந்த அதிமுகவினருக்கும், திமுக வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதற்கு முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.