தமிழ்நாடு

ஆதித்தனாரின் 113வது பிறந்த நாள் : தலைவர்கள் மலர்தூவி மரியாதை

ஆதித்தனாரின் 113வது பிறந்த நாள் : தலைவர்கள் மலர்தூவி மரியாதை

webteam

சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 113வது ஆண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன், தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் ஆகியோர் ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.