தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி: இதுவரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

kaleelrahman

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 12 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. மேலும் அகழாய்வு பணியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்விடப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.