தமிழ்நாடு

தமிழ்நாடு மின் வாரியத்தின் பல துறைகளில் கூடுதல் எண்ணிக்கையில் ஊழியர்கள் - அதிகாரி

Veeramani

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் TANGEDCO மற்றும் TANTRANSCO பிரிவுகளின் பல துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டேன்ஜெட்கோ, டேன்டிரான்ஸ்கோ பிரிவுகளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருப்பதாக மின்வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களது ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியமாக ஆண்டுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

நிலக்கரி மற்றும் நீர் மின்சார உற்பத்திக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு செலவிடும் மொத்த தொகையை விட இது அதிகம் என அந்த உயரதிகாரி தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் டேன்ஜெட்கோவுக்கு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், ஊழியர்களின் ஊதியத்திற்கு செலவிடும் அதிக தொகையால், மின்சார உற்பத்திக்கு டேன்ஜெட்கோவால் பணம் செலுத்த இயலாத நிலை நீடிப்பதாகவும் தெரிவித்தார்.