காதல் விவகாரத்தால் சென்னையில் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது காயமடைந்த அவரது தாயும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரைச் சேர்ந்த இந்துஜா என்ற பெண்ணை கடந்த 14-ஆம் தேதி ஆகாஷ் என்கிற இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். ஒருதலைக் காதல் விரக்தியில், ஆத்திரமடைந்த ஆகாஷ் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றினார். தீ வைப்பு சம்பவத்தின் போது, இந்துஜாவை காப்பாற்ற சென்ற தாய் ரேணுகா மற்றும் தங்கை நிவேதா ஆகிய இருவருமே தீயில் சிக்கினர். அவர்கள் இருவருக்கும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தாய் ரோணுகாவும் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இந்துஜாவின் தங்கை நிவேதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆகாஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.