விஜயலட்சுமி, சீமான், வீரலட்சுமி
விஜயலட்சுமி, சீமான், வீரலட்சுமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

”’ஒரே நேரத்தில் என்னையும், விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் ஒன்றாக விசாரிக்கணும்” - சீமான் மனு

Prakash J

’ஒரே நேரத்தில் தன்னையும், விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோரையும் வரவழைத்து விசாரணை செய்ய வேண்டும்’ என மனுவில் சீமான் தெரிவித்துள்ளார்.

’விஜயலட்சுமி அளித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ள சீமான், ’மூவரையும் ஒன்றாக விசாரணை செய்வதன் மூலமே உண்மை தெரியவரும்’ என்றும் கூறியுள்ளார்.

சீமான் விவகாரம் தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவரான வீரலட்சுமி, ”நாங்கள் அவதூறு பரப்புகிறோம் என்று நீங்கள் நினைத்தால் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள். கிரிமினல் வழக்கு போடுங்கள். அந்த வழக்கை எப்படிச் சந்திக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். உங்களைப் போன்று 4 ஆட்களை விட்டு மிரட்டும் வேலை எல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சட்டத்தை நம்புகிறோம்; மதிக்கிறோம்.

வீரலட்சுமி

ஆகவே, நீங்கள் சட்டரீதியாகவே அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள். விஜயலட்சுமி உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நீங்கள் ஒரு பாலியல் குற்றவாளி. உங்களுக்கு காவல் துறை சம்மன் அனுப்பினால் நீங்கள் விசாரணைக்கு ஆஜர் ஆகுங்கள். நீங்கள் தவறு செய்துள்ளீர்கள். இன்று அவர்கள் தரப்பில் 10 பேர் வந்தார்கள். பன்றிகள்தான் கூட்டமாக வரும். நான் சிங்கம், புலி. அதனால்தான் நான் தனியாக வந்துள்ளேன்” என்றார்.

முன்னதாக சீமான் மீது, கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.