நடிகை ஜூலி web
தமிழ்நாடு

’TVK-க்கு எதிரா பேசுன ஒரே காரணத்துக்காக.. என் கேரக்டர இப்படி’ - நடிகை ஜூலி கண்ணீர் பேட்டி!

கிட்னி திருடிவிட்டதாக தன்னை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜூலி புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

Rishan Vengai

தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை ஜூலி. தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் அவர், பல பின்தொடர்பவர்களை பெற்று பல்வேறு கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தவெக தலைவர் விஜய் குறித்தும், தவெகவினர் குறித்தும் தொடர்ந்து பல வீடியோக்களையும் பகிர்ந்துவருகிறார்.

இந்தசூழலில் நடிகை ஜூலிக்கு எதிராக பல எதிர்வினைகள் இருந்துவரும் நிலையில், கிட்னி திருட்டு மோசடியில் செவிலியராக பணியாற்றிய நடிகை ஜூலிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோக்களும் வெளியானது. இது தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி தொடர்ந்து Youtuberகள் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.

நடிகை ஜூலி

இந்த நிலையில் தான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளும் பொய்யான செய்திகளையும் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார்.

குறிப்பாக நெல்சன் மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் கிட்னி விற்பனை மோசடி தொடர்பாக பொய்யான அவதூறுகளை தன்னைப் பற்றி ஆதாரங்களுடன் வெளியிடுவதாக கூறி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தனது திருமண வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்பப்படுவதாகவும், தான் மனித கடத்தல் மற்றும் உடல் உறுப்பு கடத்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், பொய்யாக தன்னை குற்றம் சாட்டுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கேட்டுக்கொண்டார்.

நடிகை ஜூலி

இந்நிலையில் தான் அவர் மார்ச் மாதம் அளித்த புகாருக்கு காவல் தரப்பிடமிருந்து பதில் கொடுக்கப்பட்டதாக நடிகை ஜூலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கண்ணீர் விட்ட ஜூலி..

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜூலி, “கேள்வி பட்டிருப்பீங்க நான் கிட்னி திருடிட்டன்னு நிறைய பேரு என்மேல புகாரும், அவதூரும் பரப்பினாங்க. திருட்டுனா என்னன்னு தெரியாதவங்க பண்ணது அது, யாருக்கும் தெரியாம திருடுவது தான் திருட்டு. நான் கிட்னி திருடிட்டன்னு என்மேல அவதூரு பரப்பின 8 பேர் மேல கடந்த மார்ச் மாதம் என் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தன். அதுக்கு இந்த மாசம் 18ஆம் தேதி எனக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள், அதுவும் தவெக ஆட்சியில எனக்கு எதுக்கு இந்த நோட்டீஸ் வந்ததுனு எனக்கு தெரியல.

எனக்கு இது 3வது கல்யாணம் போன்ற அவதூறுகள் கிரிமினல் அவதூரு இல்லை எனவும், சிவில் அவதூரு என்றும் அதுனால எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதுனு சொல்லியிருக்காங்க. இதுகுறித்து என்கிட்ட எந்தவித விசாரணையும் காவல்துறையினர் தரப்பில் நடத்தப்படவில்லை. எதுவுமே செய்யாமல் நீ போய் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள் என்பது போல எனக்கு சொல்லியிருக்காங்க.

ஒரு பொண்ணு தவெகவிற்கு எதிராக பேசிட்டான்ற ஒரே காரணத்துக்காக, அந்த பொண்ணு கேரக்டர அசிங்கப்படுத்தி தான் எல்லாம் பண்ணனும்னா எனக்கு சொல்றதுக்கு எதுவும் இல்ல. இன்ஸ்டா மூலமா இன்ஸ்டண்ட்டா விஜய் அண்ணா சிஎம் ஆனதா சொல்றாங்க, அவங்க ஆளுக்கு எதிரா பேசுறவங்கள இன்ஸ்டண்ட்டா இப்படி தாக்குதல் நடத்துறது விட்டுட்டு, மக்களுக்கு எதாவது இன்ஸ்டண்ட்டா நல்லது பண்ணா நல்லாருக்கும்னு வேண்டிக்கிறன்” என பேசியிருக்கிறார்.

மேலும் தன்னை குற்றஞ்சாட்டி வெளியான ஆடியோவில் பேசியவர் தன்னை பற்றி பேசவில்லை என்றும், அதை உங்களுக்கு எதிரானதாக மாற்றிவிட்டார்கள் என்றும் எங்களிடம் கூறினார் என்று விளக்கினார். தொடர்ந்து தன்னுடைய குழந்தை குறித்து பேசியபோது கண்ணீர் விட்டார்.