விசாகப்பட்டினத்தில் நடிகை கவுதமி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்.
நடிகை கவுதமி, தனது லைஃப் அகெய்ன் அறக்கட்டளை மூலமாக விசாகப்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தினார். புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் எனும் வகையில் நடைபெற்ற இப்பேரணியில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் பாலகிருஷ்ணாவும் இதில் கலந்துகொண்டார். அடுத்த மாதம் சென்னையிலும் இப்பேரணியினை நடத்த நடிகை கவுதமி திட்டமிட்டுள்ளார்.