செய்தியாளர்: S.மோகன்ராஜ்
சேலத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அவர், க.பெ.ரணசிங்கம் உண்மை கதை என்பதால் அப்படத்திற்கு பெரிய இம்பேக்ட் கிடைத்துள்ளது. வடசென்னை, காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட படத்தின் அனுபவங்கள் மற்றும் தனக்கு பிடித்த பாடல்கள், டயலாக் உள்ளிட்டவைகளை பகிர்ந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நம்ம ஊரு கலரு மாநிறம்தான், அதுதான் அழகும் கலையும் என்றார். பின்னர் குழந்தைகளுடன் "எங்க அண்ணன்" பாடலுக்கு நடனமாடிய ஐஸ்வர்யா ராஜேஷ், கனா படத்தில் வரும் "ஆசை பட்டா மட்டும் போதாது அடம் பிடிக்கணும்" அதுக்கு அனைவரும் அடம் பிடிக்க கத்துக்கணும் என்றார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்,, தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருவதாக தெரிவித்தார்.