தமிழ்நாடு

நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் - விவேக்

நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் - விவேக்

rajakannan

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் விவேக் நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மாணவி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டரில், “நம் மண்ணின் மைந்தர்கள் மரணிப்பதை பார்ப்பதை விட சோகம் வேறு எதுவும் இல்லை. இறந்த அந்த சகோதர, சகோதரிகளுக்காக நம் இதயம் அழுகிறது. அந்த நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல், உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தனுஷ் தனது ட்விட்டரில், “ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.