கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து மக்கள் மனதின் வெளிப்பாடு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நேர்காணல் நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் திரைப்பட நடிகர்கள் எப்போதும் மக்களின் மனநிலையையே வெளிப்படுத்துவார்கள் என கூறினார். தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து மக்கள் மனதின் வெளிப்பாடு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.