படிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார். தமிழக மாணவர்கள் பாதிக்காத வகையில் அரசு சட்டம் இயற்றிட வேண்டும். ஒரு சகோதரனாக நினைத்து மாணவர்கள் தன்னை அணுகினால் அவர்களின் படிப்புக்கு உண்டான உதவிகளை செய்துதர தயாராக இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.