Actor vishal
Actor vishal pt desk
தமிழ்நாடு

"கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்"- நடிகர் விஷால்

webteam

செய்தியாளர்: எஸ்.மோகன்ராஜ்

சேலத்தில் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... "வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். எந்தக் கட்சியோடு கூட்டணி, சீட் ஒதுக்கீடு என்பது பற்றியெல்லாம் யோசிக்கக் கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசித்து கட்சியை தொடங்க வேண்டும்.

Actor Vishal

2026-ல் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியுள்ளேன். இன்னொருத்தருக்கு ஏன் நீங்கள் வழி கொடுக்கிறீர்கள். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் எங்கள் தொழிலை விட்டுவிட்டு உங்கள் தொழிலுக்கு வரமாட்டோம். தமிழ்நாட்டில் குறைகள் இல்லாத இடமே இல்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள், கொடிகள் இருக்கின்றன. ஆனால், நல்லது எதுவும் நடக்கவில்லை. புதிதாக நான் வந்தாலும் நான் வந்து என்ன செய்வேன் என்பதைத்தான் அனைவரும் சொல்லுவார்கள்.

ஒரு வாக்காளராக. சமூக சேவகராக என்னுடைய ஆதங்கத்தை நான் சொல்கிறேன். திமுக, அதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டியது மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரி செய்வதுதான். மக்கள் ஏதாவது பிரச்னை என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் போன்ற நபர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்கள். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தாமல் அவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர்.

eps, mk stalin

தமிழ்நாட்டிற்கு மாற்றம் அவசியம் தேவை. இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டடம் முடிக்கப்படும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து நடிகர் சங்கத்தில் பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.