நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய, தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என அந்த பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதனிடையே, விஜய் பற்றிய இந்த தகவல் முற்றிலும் தவறானது சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், உண்மை நிலவரம் சந்திரசேகர் அல்லது விஜய் தரப்பில் இருந்து அறிக்கை வந்தால்தான் தெரியவரும்.