தமிழ்நாடு

முதலமைச்சர் தாயார் திருவுருவப் படத்திற்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதி, அவரது தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமான ‘800’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு திரையுலக மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் இன்று படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி மறைமுகமாக அறிவித்தார். அத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நன்றி வணக்கம்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு சென்ற விஜய் சேதுபதி அவரின் தாயார் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த அவர் தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.