சுவாரஸ்ய நிகழ்வுகள்
சுவாரஸ்ய நிகழ்வுகள் முகநூல்
தமிழ்நாடு

”அப்போ நீ வாங்க வரல” நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய் முன்பு நடந்த சில சுவாரஸ்யங்கள்!

PT WEB

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை அடங்கிய தொகுப்பை நடிகர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தற்போது காணலாம்...

மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த மக்களுக்கு நடிகர் விஜய் உதவிக்கரம் நீட்டி ஆறுதல் அளித்துள்ளார். ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். நிவாரண உதவியை பெறுவதை விட விஜயை சந்திக்கிறோம் என்ற மகிழ்ச்சியே பலரது கண்களில் காணப்பட்டது. அப்போது ரசிகர் ஒருவர் திடீரென விஜய்யின் காலில் விழுந்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் அவர் மயங்கி விழுந்தவிட்டதாக பதறிப்போனார். பின்னர் அவரை தூக்கிய விஜய் ரசிகரை நிதானப்படுத்தியதோடு அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இதே போல் நிவாரணப் பொருட்களை வாங்க வந்த மற்றொரு இளம் பெண் விஜய்யுடன் செல்ஃபி எடுப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். விஜய்யுடன் செல்ஃபி எடுத்த மகிழ்ச்சியில் நிவாரணப் பொருட்களை வாங்கமலேயே அங்கிருந்த சென்றார். நிவாரணப் பொருட்கள் வேண்டாமா என விஜய் கேட்க... தங்களுடன் செல்ஃபி எடுக்கவே வந்ததாகவும், பொருட்கள் வேண்டாம் என கூறி நகர்ந்து சென்றார்.

நிவாரணப் பொருட்களை வாங்க வரிசையில் வந்த மூதாட்டி ஒருவர் யார் விஜய் என கேட்டபடி விஜயை கடந்து சென்றார். பின்னர் நான் தான் விஜய் என கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார். விஜயை பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி விஜய்யின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தார்.

நிவாரணப் பொருட்களை பெறுவதை விட விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்தால் போதும் என்பதே பலரது எண்ணமாக இருந்தது. இறுதியாக அனைவருடன் இணைந்து விஜய் செல்பி எடுத்துக் கொண்டார்.