அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரை சந்தித்து நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு கூட்டணிக் கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூரி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். சூரி அண்மைக்காலமாக நிலம் வாங்கிய பிரச்னையில் சிக்கியிருப்பதும், அவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.