அண்மையில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக இருந்த தமிழ்பொன்னி என்பவருக்கு பதில் திவ்யா சத்யராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக கழக சட்டதிட்ட விதிகளின்படி அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி திவ்யா சத்யராஜ், தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.