நடிகர் ரஞ்சித் - தவெக தலைவர் விஜய் pt
தமிழ்நாடு

”வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்..” தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசிய நடிகர் ரஞ்சித்!

தவெக தலைவர் விஜயை நடிகர் ரஞ்சித் ஒருமையில் பேசியது சர்ச்சைக்குரிய விசயமாக மாறியுள்ளது.

Rishan Vengai

நடிகர் ரஞ்சித், விநாயகர் சதுர்த்தி விழாவில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்ததோடு, தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்பி கமல்ஹாசனை விமர்சித்த ரஞ்சித்..

இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனார்.

இந்நிகழ்ச்சியின் மேடையில் பேசிய திரைப்பட நடிகர் ரஞ்சித் நடிகரும் எம்பியுமான கமல்ஹாசனை மோசமான முறையில் விமர்சித்தது மட்டுமில்லாமல், தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசியது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

நடிகர் ரஞ்சித்

மேடையில் பேசிய ரஞ்சித், “நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பதில் கூட பிரச்னை, சாமி கும்பிடுவதில் கூட பிரச்னை. 100 முறை என்னை சங்கி என்றே அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அதை நான் மார் தட்டி ஏற்றுக்கொள்வேன். இந்துமதம் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை, யாரையும் கொலை செய்ய சொல்வதில்லை, அன்பு காட்டுவது ஒன்று மட்டுமே இந்துமதம். என்னுடைய காரை ஓட்டுபவர் கூட இஸ்லாமிய சகோதரர் தான், இங்கு எல்லா கடவுளும் ஒன்றுதான், வழிபடும் விதம் தான் வேறுவேறு” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தவெக மதுரை மாநாடு குறித்து பேசியவர், “சமீபத்துல மதுரை மாநாட்டுல தம்பி விஜய் , நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசுறாரு. யார சொல்றாரு எம்ஜிஆரையா, அம்மாவையா, இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல் ஹாசனையா?. எனக்கு என்னமோ கமல்ஹாசன நேரா சொல்ல முடியாம இப்படி சொல்லிருப்பாருனு நினைக்கிறன். பிழைப்பு தேடி அரசியல் செய்றவர் என்பது அவருக்குத்தான் சரியா இருக்கும்” என்று விமர்சித்தார்.

விஜயை ஒருமையில் பேசிய ரஞ்சித்..

தொடர்ந்து மோடி குறித்து விஜய் பேசியதை குறிப்பிட்டு சொன்ன ரஞ்சித், “கைய சொடக்கு போட்டு திரு மோடி ஜீ-னு சொல்றாரு, 2014 ஏப்ரல் 16-ல் கொடிசியாவில் மோடி முன்பு பூனை போல் பம்மிட்டு உட்கார்ந்து இருந்தியே தம்பி, அன்னைக்கு எதுக்கு வந்து பார்த்த, கட்சத்தீவ மீட்கவா, இல்லை மீனவர்களுக்காக வந்து பார்த்தியா, இல்லை சமகல்வி ஆக்குங்கனு வந்து பார்த்தியா. எதுக்கு வந்து பார்த்த (ஒருமையில் பேசினார்), தலைவான்ற உன் படம் ஓடணும்னு வந்து பார்த்த, இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற, பழச எல்லாம் மறந்துட்டியா. தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், தம்பி மறந்துட்டாருனு நினைக்கிறன். மூளைல கொஞ்சம் பிரச்னை இருக்குன்னு நினைக்கிறன்.

நடிகர் ரஞ்சித்

மிஸ்டர், மிஸ்டர்னு சொடக்கு போட்டு சொல்லும்போதெல்லாம், ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடி தான், அவர்தான் என்ன காப்பாத்துறாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி, அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு கூப்டுற.  அறிவில்லையா.. (ஒருமையில் பேசினார்) mr மோடி என்கிறாய் ...முதல்வரை uncle என்கிறாய்? நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவாங்க. எனக்கு வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. ஓங்கி ஓட்டாக குத்துவோம்” என்று விமர்சித்து பேசினார்.