தமிழ்நாடு

“அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது” : ரஜினிகாந்த்

webteam

அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70 வயது நிரம்பிய கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.