தமிழகத்தை காப்பற்ற ஸ்டாலினால்தான் முடியும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராதாரவி திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் இணைந்தது கட்சியில் சேர்ந்தது போல் இல்லை. குடும்பத்தில் இணைந்ததைப் போல உணர்கிறேன் என்றார். இன்றைய சூழலில் தமிழகத்தைக் காப்பாற்ற ஸ்டாலினால்தான் முடியும் என்றும் ராதாரவி குறிப்பிட்டார். தமது தாயார் இறந்தபோது ஆறுதலாக இருந்தவர் ஸ்டாலின்தான் என்று குறிப்பிட்ட ராதாரவி, தங்க சாலையில் நாளை நடைபெறும் திமுகவின் பொதுக்கூட்டத்தில் தனது எண்ணங்களை முழுமையாக வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.