தமிழ்நாடு

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி !

jagadeesh

பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி அக்கட்சியில் இணைந்தார்.

பா.ஜ.க செயல் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். அப்போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதில், நடிகர் ராதாரவியும் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி http://bit.ly/2KIhf7X

நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கு நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுகவில் இருந்து விலகிய ராதாரவி, அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் ஜூன் மாதத்தில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.