நலிந்த விவசாயிகளைக் காக்க நடிகர்கள் முன் வந்து நிதியுதவி வழங்கினால் நன்றாக இருக்கும் என நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் 10 பேருக்கு நடிகர் பிரசன்னா- சினேகா தம்பதி 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், விவசாயிகளின் விளை பொருட்களை வாங்க பொதுமக்கள் முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். “நாம் இங்கே நன்றாக இருக்கிறோம். ஆனால் சோறு தரும் விவசாயிகள் அங்கே கஷ்டப்பட்டு போராடி வருகின்றனர். எனவே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதியுதவியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.