நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல், இறுதிச்சடங்கிற்காக அவருடைய சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், மாரிமுத்துவின் தாயார், "நான் பெத்த மகனே.. என்னைவிட்டுப் போறீயே..." என அழுது புலம்பிய காட்சி அனைவரது இதயங்களையும் கணக்கச் செய்தது.