நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது வரை தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்று கூறி புதிய கட்சி தொடங்கியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த சில வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்த அவர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.