தமிழ்நாடு

மாணவர்கள் கையில் இருந்தவரை போராட்டம் அமைதியாக இருந்தது: லாரன்ஸ்

மாணவர்கள் கையில் இருந்தவரை போராட்டம் அமைதியாக இருந்தது: லாரன்ஸ்

webteam

ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் கையில் போராட்டம் இருந்தவரை அமைதியாக இருந்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

மெரினாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஒற்றைக் கோரிக்கை. ஆனால் போராட்டத்தில் புகுந்த ஒருசிலர் தேவையற்ற கருத்துகளைப் பேசுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை நீக்கிய முதலமைச்சர், பிரதமருக்கு நன்றி. கோரிக்கை நிறைவேறியதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்றுக் கொண்டது போல நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய லாரன்ஸ், ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது எனவும் தடியடி நடத்தியதற்காக காவல்துறை மன்னிப்பு கோரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவருடன் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள், ஆளுநர் கையெழுத்திட்ட சட்ட முன்வடிவு நகல் கிடைத்தவுடன் போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம். அடுத்த இரண்டு, மூன்று மாதத்தில் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.