தமிழ்நாடு

நேர்மைக்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது: நடிகர் கார்த்தி

நேர்மைக்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது: நடிகர் கார்த்தி

webteam

தூங்காமல் பணி செய்வதால் தான் காவலர் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை துவக்க விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், சிவக்குமார், கார்த்தி பங்கேற்றனர். 
விழாவில் பேசிய கார்த்திக், “சம்பளத்திற்காக என்று இல்லாமல் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் காவல்துறை பணி செய்ய முடியும். நேர்மையாக உழைத்ததற்கு இந்த சமூகம் என்ன செய்தது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தோன்றி விடக்கூடாது. நேர்மையான அதிகாரிகள் தைரியமாக இருப்பதற்கு இதுபோன்ற அறக்கட்டளை தேவை என்றார். பின்னர் பேசிய நடிகர் சிவக்குமார், “எவ்வளவு சொத்து சேர்த்தாலும், பசி, பினி, தூக்கம், காதல் போன்றவை அனைவருக்கும் சமம் என்றும், நாட்டை காப்பாற்றும் இராணுவ வீரர்கள் ஓய்வுப்பெற்றவுடன் வீட்டை காப்பாற்றும் செக்யூரிட்டியாக இருப்பது அவலம் என்று வருத்தம் தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, கீழ்மட்ட அலுவலர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. காவலர்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை களைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நேர்மையாக இருப்பதற்கு இங்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும், ‘தீரன்’ படத்திற்கு பிறகு காவலர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்த அறக்கட்டளை துவக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியவர், தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்குமான அறக்கட்டளையாக இது செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.