செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை போரூரில் உள்ளது நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரைப் போலவே பல நோயாளிகளும் மருத்துவரை பார்க்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் திடீரென அங்கிருந்த மருத்துவ ஊழியிடம் கஞ்சா கருப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும் தன்னைப் போலவே நாய் கடித்து ஒருவர், மண்டை உடைந்து ஒருவர் என பல நோயாளிகள் காத்திருக்கின்றனர். குறிப்பாக வயதான மூதாட்டி ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனை வந்துள்ளார். ஆனால், யாரையும் பார்க்க மருத்துவர் இல்லை என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அவரை போலவே அங்கு இருந்த நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகள் சிறப்பாக உள்ளன. சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கல் இல்லை என குற்றம்சாட்டிய கஞ்சா கருப்பு, இதுகுறித்து அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் கற்பகத்திடம் கேட்டபோது மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.