தமிழ்நாடு

”ட்வீட்டில் அடங்காத் துயரம்” - தொ.பரமசிவன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த கமல்ஹாசன்

webteam

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தார்.

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.

இந்நிலையில் தொ.பரமசிவன் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் “ தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம்.” என்று பதிவிட்டுள்ளார். 

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். <br>இது ட்வீட்டில் அடங்காத் துயரம். <a href="https://t.co/mvc5rY9EeW">pic.twitter.com/mvc5rY9EeW</a></p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1342132242580004865?ref_src=twsrc%5Etfw">December 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தமிழில் இயங்கிவந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராக தொ.பரமசிவன் திகழ்ந்து வந்தார். அத்துடன் தமிழ் பண்பாட்டின் வேர்களை தனது நூல்கள் மூலமும் எடுத்துரைத்தும் வந்தார். அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் போன்ற நூல்கள் தொ.பரமசிவத்தின் முக்கிய படைப்புகளாகும்.