தமிழ்நாடு

தீபாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து நடிகர் ஆனந்தராஜ் ஆலோசனை

தீபாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து நடிகர் ஆனந்தராஜ் ஆலோசனை

Rasus

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என அதிமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் பணி குறித்து இன்று முக்கிய முடிவை வெளியிடப் போவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

இதனிடையே,சென்னையில் தீபாவின் ஆதரவாளர்கள் நடிகர் ஆனந்த ராஜை சந்தித்து ஆதரவு கோரினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்த ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.