அஜித்குமார் web
தமிழ்நாடு

அஸ்வின்-க்கு பத்மஸ்ரீ | நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு

7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது

PT WEB

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கலைத்துறையில் நடிகர் அஜித்குமார் மற்றும் சோபனா சந்திரசேகருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது

மதுரை பறை இசைக் கலைஞருக்கு பத்மஸ்ரீ

தமிழகத்தைச் சேர்ந்த தாமுதரன், லட்சுமிபதி ராம சுப்பையர், சீனி விஸ்வநாதன் போன்றோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவில் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விரைவில் டெல்லியில் நடைபெறும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க இருக்கிறார். ஏற்கனவே மதுரை பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.