தமிழ்நாடு

”அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் செந்தில்பாலாஜி

”அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் செந்தில்பாலாஜி

Veeramani

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 71 மாற்றுத் திறனாளிகள், தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான நியமன ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மதுபானக் கடைகளை பொருத்தவரை மக்களிடமிருந்து வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் தற்போது வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் காவல்துறை அதிகாரியை எம்எல்ஏ ஒருவர் ஒருமையில் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.