தமிழ்நாடு

குற்றச்செயல்களை தூண்டும் வகையில் கானா பாடல்கள் வெளியிட்டால் நடவடிக்கை - காவல்துறை

கலிலுல்லா

இளைஞர்கள் மத்தியில் குற்றச்செயல்களை தூண்டும் வகையில் கானா பாடல்களை உருவாக்கி வெளியிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆபாச பதிவுகளுடன் கானா பாடல் வெளியிட்டதாக சரவெடி சரண் என்பவரை கைது செய்து எச்சரித்து அனுப்பியிருந்தனர் காவல்துறையினர். இதனைத்தொடர்ந்து அவதூறு, ஆபாசம், போதை, குற்றச்செயல்களை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்த 100க்கும் அதிகமான கானா பாடல்களை சைபர் க்ரைம் காவல்துறையினர் நீக்கியுள்ளனர்.

மேலும் கானா பாடகர்களை அழைத்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆலோசனை நடத்தினார். சர்ச்சையான கானா பாடல்களை நீக்குமாறும், மீண்டும் இது போன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது அவர் எச்சரித்தார்.