தமிழ்நாடு

மறக்க முடியுமா கருணாநிதியை...!

மறக்க முடியுமா கருணாநிதியை...!

webteam

* கருணாநிதியின் முதல் அரசியல் குரு பட்டுக்கோட்டை அழகிரிசாமி. இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டே திராவிட இயக்கத்தில் அவர் சேர்ந்தார். 

* தன் தந்தை முத்துவேலரின் பெயரையே தனது முதல் மகனான முத்துவுக்குச் சூட்டினார். இரண்டாவது மகனுக்கு, அரசியல் ஆசான் அழகிரியின் பெயரைச் சூட்டினார். 3வது மகனுக்கு அவர் சூட்டத் திட்டமிட்டிருந்த பெயர் அய்யாத்துரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாதுரையையும் குறிக்கும். ஆனால், 1953ம் ஆண்டு ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் மறைந்ததையொட்டி, அவரது நினைவாக அய்யாத்துரை மு.க.ஸ்டாலின் ஆகிவிட்டார்

* 1942ம் ஆண்டு கருணாநிதி எழுதிய இளமைப்பலி என்னும் கட்டுரை அண்ணாவின்‘திராவிட நாடு’ இதழில் வெளியானது. அப்போது கருணாநிதிக்கு வயது 18.  

* திருவாரூர் வந்த அண்ணா, ஒரு மாணவராக கருணாநிதியை எதிர்பார்க்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்த அண்ணா கூறியும், கலை, இலக்கியம், அரசியல் எனப் பொதுவாழ்வில் கவனம் செலுத்தினார் கருணாநிதி. 

* திருச்சி வானொலி நிலையத்திற்கு 1944ம் ஆண்டு கருணாநிதி அனுப்பி வைத்த நாடகத்தை, ஒலிபரப்ப முடியாது எனத் திருப்பி அனுப்பினர். அதன் வசனங்களும், கதாப்பாத்திரங்களும் ஆட்சியாளர்களை தோலுரித்துக்காட்டியதே அதற்கு காரணம். ‘குண்டலகேசி’ என்னும் அந்த நாடகமே பின்னாளில் ‘மந்திரிகுமாரி’ என்ற திரைப்படமானது. 
 

                                                                                                                                                                                                              தொடரும்.......