இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி இன்று பதவியேற்றார். 64 வயதான ஜோதி 1975ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். குஜராத் மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ள ஜோதி ஜனவரி மாதம் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பார்.
இதற்கிடையில் தனது பதவிக்காலம் திருப்திகரமாக இருந்தாக தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார். தனது பதவிகாலத்தில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.