தமிழ்நாடு

பெற்றோர் செலவுக்கு பணம் தராததால் உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இளைஞர் கைது

பெற்றோர் செலவுக்கு பணம் தராததால் உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இளைஞர் கைது

webteam

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சில நீதிபதிகள் வீட்டில் வெடிகுண்டு வைப்பேன் என கடந்த 21ஆம் தேதி மிரட்டல் கடிதம் வந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற துணை பதிவாளர் இந்துமதி உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடிதம் எழுதிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன்‌படி மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்தனர். பெற்றோர் செலவுக்கு பணம் தராததால் ராஜேஷ் இச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.