தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: சென்னையில் 150 டன் பட்டாசு குப்பைகள் சேகரிப்பு

webteam

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்ததில் 150 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று பொதுமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வண்ண, வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பட்டாசுகள் வெடிக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் பட்டாசு குப்பை ஒவ்வொரு தெரு வீதியிலும் குவிந்து காணப்பட்டன.

சென்னையில் 15 மாநகராட்சி மண்டலத்திலும் குப்பைகள் தனித் தனியாக சேகரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டாசுக் கழிவுகள் சேகரிக்க தனியாக 30 கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 150 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கடந்த 2021 ம் ஆண்டு 138 டன் பட்டாசு கழிவுகளும், 2020ம் ஆண்டு 93 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவிக்கிறது. அதேபோல் 2019ம் ஆண்டு 103 டன்  பட்டாசு கழிவுகளும், 2018 ல் 95 டன் குப்பைகளும், 2017 ம் ஆண்டு 85 டன் சேகரிப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சேகரிக்கப்படும்  பட்டாசுக் குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுகள் சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்கலாமே: கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு