தமிழ்நாடு

கார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி!

கார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி!

webteam

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

சென்னையை சேர்ந்த வேலு என்பவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் பொங்கலை கொண்டாடுவதற்காக காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.