சிவகாசியில் தனியார் கல்லூரி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்தார்.
சிவகாசி வேலாயுத சாலையில் இரு சக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மீனா என்ற இளம்பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற உயரிழந்த பெண்ணின் சகோதரர் பிரசாந்த் லேசான காயத்துடன் உயிர்த் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனியார் கல்லூரி வாகனங்கள் தொடர்ந்து அதிவேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,