கன்னியாகுமரியில் கார் ஓட்டி வந்த இளைஞர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்தால் விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அதிவேகமாக வந்த கார் சாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. காரில் இருந்து 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீட்கப்பட்டார். அவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த ஷானு என்பது தெரியவந்தது. கார் ஓட்டுவதில் போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தடம் புரண்ட கார், கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் மோதி தள்ளியுள்ளது. அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியும் நிற்காத வாகனம் இறுதியாக ஒரு சலூன் கடையில் மோதி நின்றது. இவ்விபத்தால் மனித உயிர்களுக்கு சேதம் இல்லையென்றாலும் நொடிப்பொழுதில் பலரை நடுநடுங்க வைத்த சம்பவமாக இருந்தது. ஷானு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.