தமிழ்நாடு

தரமற்ற சாலைகளால் விபத்து... காவல் நிலையத்தில் புகார்.!

தரமற்ற சாலைகளால் விபத்து... காவல் நிலையத்தில் புகார்.!

Rasus

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி மேலாளர் ஆகியோர் மீது  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில்  பழுதடைந்து உள்ளது. பூவிருந்தவல்லி, வானகரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

சாலையை பராமரிக்க நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை செலவு செய்வதாக கூறியும் சாலை செப்பனிடப்படவில்லை. தரமற்ற சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு உயிர் இழப்பு நேர்ந்து வருகிறது. உயிர் இழப்பிற்கு சாலையை சீரமைக்காத சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை  திட்ட இயக்குனர் நாராயண ராவ் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர் கதிர்வேதியை கைது செய்ய வேண்டும்” எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது.