தமிழ்நாடு

திம்பம் மலைப்‌ பாதையில் தொடரும் விபத்துகள்

திம்பம் மலைப்‌ பாதையில் தொடரும் விபத்துகள்

webteam

திம்பம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான லாரியை மீட்கச் சென்ற, பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 6வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது தேங்காய்களை ஏற்றிச் சென்ற லாரி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. தகவலறிந்து சென்ற போலீஸார் மீட்பு வாகனங்களை வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரமும் கவிழ்‌ந்து விபத்துக்குள்ளானதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு லாரியும், பொக்லைன் இயந்திரமும் அகற்றப்பட்டன. திம்பம் மலைப் பாதையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.