புதுக்கோட்டை: கார் மேலே ஏறி நின்ற பேருந்து... நெஞ்சை உலுக்கும் கோர விபத்து!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கார் மீது பேருந்து மோதிய கோர விபத்தில் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி பேருந்தை விலக்கி காரை தனியாக எடுத்தனர். இன்னும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.