தமிழ்நாடு

’’மாணவர்கள் எளிதாக சென்றுவர புறநகர் ரயிலை இயக்க வேண்டும்’’ - கமல்ஹாசன்

kaleelrahman

கல்விச்சாலைகள் திறந்துள்ளதால் மாணவர்கள் எளிதாக சென்றுவர புறநகர் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பள்ளி தமிழகத்தல் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது. தமிழகம் முழுதும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டிருந்தது.


இந்நிலையில் கொரேனாவின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பதிவில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.