தமிழ்நாடு

2020 விதைகளில் உருவான அப்துல்கலாம் உருவம் - தன்னார்வலருக்கு குவியும் பாராட்டு

webteam

2020 விதைகளை கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவத்தை தயார் செய்த தன்னார்வலரின் படைப்பு பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.


மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் அசோக்குமார். இவர் அப்பகுதியில் வீடுவீடாக தண்ணீர் கேன்களை விற்று வருகிறார்.கொரோனா பொது முடக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில் நாளை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதாலும், அதே வேளையில் 2020 ஆம் ஆண்டு லட்சிய ஆண்டாக குறிப்பிட்டதாலும் அவரை நினைவுப்படுத்தும் வகையில் கொடிக்கா விதை, சீத்தாப்பழ விதை, குதிரைக்குழம்பு விதை, சீயக்காய் விதை, வேங்கை மரம், புளிய மரத்தின் விதை உள்ளிட்ட 2020 விதைகளை கொண்டு அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்தை தயார் செய்துள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்த அசோக் கூறும் போது “ பொதுவாக மரங்கள் வளர்ப்பதில் அப்துல்கலாம் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த முயற்சியை கையில் எடுத்தேன். மேலும் 2020 ஆம் ஆண்டை அப்துல் கலாம் லட்சிய ஆண்டாக அறிவித்ததை தெரியப்படுத்தும் வகையில் கிட்டத்தட்ட 2020 விதைகளை வைத்து உருவத்தை தயார் செய்திருக்கிறேன். அப்துல்கலாம் அவர்களின் லட்சிய ஆண்டு 2020 என்பதால் அப்துல்கலாம் அவர்களின் கனவுகளை இளைஞர்கள் நெஞ்சில் ஏற்றி செயல்பட வேண்டும் என்று கூறினார்.