கோவையில் கின்னஸ் சாதனை முயற்சியாக, காகித கோப்பைகளில் அப்துல்கலாம் முகத்தை தனியார் பள்ளி மாணவர்கள் உருவாக்கினர்.
கோவை கணபதி அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 167 மாணவர்கள் சேர்ந்து, 2 லட்சத்து 35 ஆயிரம் காகித கோப்பைகளில் அப்துல்கலாம் உருவத்தை உண்டாக்கினர். இதற்காக 5 வண்ணக் கோப்பைகளைப் பயன்படுத்தி 10 ஆயிரத்து 560 சதுர பரப்பளவில் அப்துல்கலாம் உருவத்தை உருவாக்க, 3 மணி நேரமே தேவைப்பட்டது. கடந்த 2016ல் லக்னோவில் 1 லட்சத்து 40 ஆயிரம் கோப்பைகளில் 627 சதுர அடியில் வோடஃபோன் லோகோவை உருவாக்கிய கின்னஸ் சாதனையை, கோவை மாணவர்கள் முறியடித்துள்ளனர். இந்த சாதனையை கின்னஸ் புத்தகதில் இடம்பெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.