CM Stalin pt desk
தமிழ்நாடு

இந்தி திணிப்பை கைவிட வேண்டும்... இதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி – முதல்வர் ஸ்டாலின்

மாநில சுயாட்சி வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சந்தான குமார்

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கோபாலபுரம் இல்லத்தில் உள்ள தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் தனது குடும்ப உறவினரான மறைந்த முரசொலி செல்வம் இல்லத்திற்குச் சென்று அவரது உருவப்படத்திற்கும் அஞ்சலி செலுத்திய குடும்பத்தாரிடம் வாழ்த்து பெற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசியபோது...

நேற்று நடைபெற்ற என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் அந்த மேடையில் கூட பேசியுள்ளேன், மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும்;. இருமொழிக் கொள்கையை தான் கொண்டுவர வேண்டும். இதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி...

நேற்று தொடங்கப்பட்ட கட்சிகள் கூட திமுகவை குறை சொல்லி தான் அரசியல் செய்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றியும் தமிழ்நாட்டை பற்றியும் தான் ...மாநில உரிமையை நாம் பெற வேண்டும் என்பதை பற்றி தான் என்னுடைய கவலை உள்ளது.

தொகுதி மறு வரையறை விவகாரத்தில் இல்லாத பிரச்னையை தமிழக முதலமைச்சர் பேசி வருவதாக மத்திய அரசு குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், இல்லாத பிரச்னை என்று சொல்லும்போது அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ...