ஆவின் பால் கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

சென்னை: “கனமழை இருந்தாலும், ஆவின் பால் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படும்”

கனமழை இருந்தாலும் சென்னையில் உள்ள 8 ஆவின் பால் நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

PT WEB

அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால், ப்ரெட் போன்ற உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம் என மக்கள் பலரும் நினைக்கக்கூடும்.

இதனால் பால் மற்றும் உணவு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால், அதை தடுக்கும் பொருட்டு, சென்னையில் இயங்கி வரும் 8 ஆவின் பால் நிறுவனங்களும் 24 மணிநேரமும் செயல்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பால் தட்டுப்பாடு இருக்காது என அரசு தெரிவித்துள்ளது. ஆகவே... மக்கள் அச்சப்படத் தேவையில்லை